Saturday, August 25, 2018

ஒரு வார்த்தைச் சொல்லடி - உன்னுள் உறைகிறேன்

கண்ணெதிரே வந்தாய்
கனவிலும் கொன்றாய்
காதலிக்க தொடங்கினேன்
காணலாய் மாறினாய்

தொட்டுவிடும் தூரத்தில் நின்றாய்
நெருங்கினால் பட்டாம்பூச்சியாய் பறந்தாய்
மனதில் நிறைந்தாய்
மாயம் செய்தாய்

அன்பை உணர்ந்தேன்
அரவணைக்க ஏங்கி என்
காதலைச் சொன்னேன்
ஆசை இருந்தும் ஏற்க மறுத்தாய்

ஆயிரம் பதில்களை அள்ளி இறைத்தாய்
அவ்வப்போது தாயாய் மாறி திகைக்க வைத்தாய்

அனாதயாய் திரிந்த என்னுள் அன்பை விதைத்து
அழகான தருணங்களையும் அழியாத சுவடுகளையும் அளித்து

ஆழியலையாய் கடலில் கலந்த அழகே
கரையை வெறித்தே நிற்கிறேன்
மீண்டும் உனை கண்டிடுவேனோ என்று...

உனக்காய் தானடி வாழ்ந்தேன்
இன்று எனையே தொலைத்து தேடுகின்றேன்...
மறக்க நினைக்கவில்லை
மரணம் தந்த வலியும் பொறுக்கவில்லை...

பசியென்றுகூட சொல்ல தெரியாத பச்சிளங்குழந்தையாய் பார்க்கிறேன்
உன் மீளா உறக்கத்தை...

செல்லமே
ஒரு வார்த்தை சொல்லடி

உன் கடைசி வார்த்தைகளை
காற்றுடன் கவிபாட கரைத்துவிட்டு

உன் கல்லறையின் அருகிலே
காவியம் ஆவோம்...

#காதலியை இழந்த காதலனின் கிருக்கள்...

4 comments:

  1. Yar andha kadhali?

    ReplyDelete
    Replies
    1. கவிதை என்று நினைத்த எழுதுபவனுக்கும் காற்றும் கடலும் கல்லும் கரையும் கூட காதலி தான்... காதலி என்று குறிப்பிட்ட ஒருவர் இன்னும் என்னை வந்தடையவில்லை 😝😝😝😂😂😂

      Delete