மீண்டும் சந்தித்து விட்டேன்
என் முன்னால் காதலியை...
ஆம்...
யாருமில்லா மொட்டை மாடியில்
நாம் பகிர்ந்த கதைகள்...
ஊரார் உறவினர் உடனிருந்தும்
உண்மையான நண்பர்கள்
உரிமையாக உதைத்தும்
ஏனோ
உனை மட்டும் உன்னிப்பாய் ரசித்திட்ட ரயில் பயணங்கள்...
தனிமையில் கடற்கரையில்
நிலவோடு உறவாடி
பொழுதுகள் கழித்திட்ட போதும்...
தனியாகப் பயனின்றி
பேருந்தில் பயணித்த தருணங்களிலும்
நீ எனை தீண்டிய போதெல்லாம்
ஏனோ உடல் சிலிர்த்ததடி...
பல மைல் தூரம் நான் கடந்து
பார்த்திடாமல் ஏங்கியதை அறிந்ததால் தானோ
எனை காண ஓடோடி வந்துள்ளாய்
என் கண்மணியே...
என் முன்னால் காதலியே...
நீ எனை தீண்டும் போதெல்லாம்
ஏனோ என் உடல் சிலிர்க்குதடி...
சாரல் மழை...
பல மாதம் கழித்து மழையில் நனைந்துகொண்டு நடக்கையில் உதித்தது...
#சாரல்மழை #மழை #இயற்கை #இயற்கைவிரும்பி #nature #naturelover #rain #drizzle #crazeonrain #bangaloredays
No comments:
Post a Comment