Tuesday, August 7, 2018

கலைஞர் உடல் நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு...

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கலைஞரின் உடல் நிலை மோசமாகியுள்ளதால் காவேரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்திற்கு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இன்று மாலைக்குள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை காவேரி மருத்துவமனை வெளியிட வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் சென்னை காவேரி மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தியுள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், டி.எஸ்.பிக்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சீருடைகளுடன் காவல் நிலையங்களுக்கு பணிக்கு திரும்ப டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.விடுமுறையில் இருக்கும் காவலர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment