மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கலைஞரின் குடும்ப உறுப்பினர்களும் கட்சி தலைமை தொண்டர்களும் கலைஞரின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. மேலும், மெரீனாவில் அடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரீனாவுக்கு பதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கம் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியானது வேதனையில் இருக்கும் திமுக தொண்டர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த முடிவானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், தங்கள் தலைவரான கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் தான் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர். மேலும், இவர்களின் இந்த வார்த்தைகளானது ஆதங்கத்தை வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment