கலைஞர் கருணாநிதி அவர்களின் மரணம் தமிழகத்தையே கலங்க வைத்திருந்தாலும் அவரின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே உள்ள காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக உள்ளதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் அவர்கள் எப்பொழுதும் சொல்வது போல், தன்னை கடலிலே தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பார் ஆதலால் தான் அவரின் ஆன்மாவும் பூத உடலும் அமைதியுற வேண்டும் என்பதால் அகிம்சை வழியில் போராடி நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி மண்டபம் அருகிலே நல்லடக்கம் போல்...
முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் ஆன்மா அமைதியுற வேண்டுவோம்...
No comments:
Post a Comment