இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, முன்னதாக நடந்த 20 ஓவர் தொடரை கைப்பற்றியது, அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில், தற்பொழுது இவ்விரு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. வழக்கத்துக்கு மாறாக இத்தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆசிய மண் அல்லாத அயல் நாடுகளில், குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இதுவரை நடைபெற்ற தொடர்களில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். அப்படி இருந்த நிலையில், தற்போதைய கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி வருகிறது எனலாம். சமீபத்தில் தென்னாபிரிக்காவில் கூட இந்திய அணி குறிப்பிடும் அளவிற்கு செயல்பட்டது.
இந்நிலையில், தற்போதைய இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணியின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதை காண முடிகிறது. ஒரு காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய மற்றும் ஆசிய மண்ணில் விளையாடும் தொடர்களில் மட்டுமே மிகுதியாய் பயன்படுத்தி வந்த நிலையில், தற்பொழுது தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து திணறி வருகிறது. முன்னதாக குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் திண்டாடியதையும் பார்க்க முடிந்தது.
இதற்கிடையில் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில், அஸ்வின் பந்து வீசும்போது விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தமிழிலே பேசியும் சிரித்துக்கொண்டும் இருந்ததை கண்டு பலரும் குழப்பத்தில் நின்றனர். இதில் கேப்டன் கோஹ்லியும் ஒருவர். அவர்கள் இருவரும் தமிழில் பேசுவது புரியாமல் கோஹ்லியும் திணறுவதாய் வர்ணனையாளர்கள் கூறியதையும் பார்க்க முடிந்தது. இருப்பினும் அது ஒரு நல்ல எதிர்வினைக்காகதான் என்பதை உணர்ந்த கோஹ்லியும் அவர்களை ஊக்கப்படுத்தியதையும் காண முடிந்தது. முதல் நாளில் இந்திய அணியின் ஆதிக்கம் இருந்ததால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் 2 மற்றும் 3ம் நாள் ஆட்டத்தை பொறுத்தே இப்போட்டியின் முடிவு அமையும்.
இத்தொடரில் அஸ்வின், கார்த்திக் மற்றும் முரளி விஜய் ஆகிய மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment