சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடங்கள் அமைக்கக் கூடாது என தொடரப்பட்ட விவகாரத்தில், அந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் வாபஸ் பெற்றதால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது...
சென்னையின் மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நினைவிடங்களால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தி வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுகவினர் தரப்பில் இருந்து மெரினாவில் இடம் ஒதுக்க வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் நினைவிடங்களுக்கு எதிராக உள்ள வழக்கை காரணம் காட்டி தமிழக அரசு கோரிக்கையை மறுத்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர் காந்திமதி, தனது மனுவை திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து இவ்வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அறிவித்தது...
உடல் நலக் குறைவு குணமாகி கலைஞர் கருணாநிதி அவர்கள் மீண்டு வர வேண்டும் என பல்லாயிர கணக்கான தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment