Friday, April 27, 2018
Do you feel vomiting sensation while travelling??? Have a look over...
Tuesday, April 17, 2018
What a real maturity is??? Committed guys are most welcome
Sunday, April 15, 2018
Happy Transgenders day... (April 15)
Happy transgenders day... (APR 15 அன்று எழுதியது)
#Personal_experience
இது தெரிய வந்த மறுகணமே எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது...
ஒரு வருடத்திற்கு முன், அலுவலக பணி காரணமாக, transgenders and gays பற்றிய researchகாக அவர்களில் சிலரை நேர்காணல் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது... பல புதிய மற்றும் ஆழ் மனம் தொடும் பல விஷயங்கள் தெரிய வந்தது... அவர்கள் கூறிய பல சம்பவங்கள் எங்களை கலங்க வைத்தது... அவ்வகையில் இருவரின் தொடர்பு கிடைத்தது... வேறு ஏதும் தகவல் அல்லது உதவிக்கு கைபேசி எண்களை பகிர்ந்தோம்... அதில் ஒருவர், என் whatsapp status ai தொடர்ச்சியாக பார்த்து வந்தார்... சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து முதல் குறுந்தகவல் வந்தது...
அண்ணா உங்க whatsapp status எல்லாம் அருமையா இருக்கு... கவிதைகளும் hykoo வும் சிறப்பு... எங்களுக்காக நீங்கள் ஒரு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார்...
அப்போ நான் சொன்னேன், ஐயோ எனக்கு கவிதை லாம் எழுத தெரியாது மா... சும்மா தோணுவதை எழுதுவேன் அவ்ளோ தான் மா... serious sensible issues lam எழுத ஆரமிக்கலனு சொன்னேன்... நன்றி அண்ணா...உங்கள் கற்பனையும் எழுத்தும் தானே கவிதை... என்பதோடு முடித்துக்கொண்டார்...
இது என் மனதில் ஒலித்து கொண்டே இருந்தது, 4, 5 நாட்கள் கழித்து ஒரு குறுஞ்செய்தியை நான் அனுப்பினேன்...
நீங்க கேட்டதை யோசிச்சிட்டே இருந்தேன்... ஒன்னு தோணுச்சு எழுதிருக்கேன்... என்று...
என் உயிரை கொடுத்து
உன்னை காக்க முடியும்,
ஆனால்
உனக்கோர் உயிர் கொடுத்து
காக்க முடியவில்லையே...
என்று...
அதற்கு அவர், அண்ணா, சத்தியமா, எல்லாரும் நாங்க பாவம், கஷ்ட படறோம், பிச்சை எடுக்குறோம், தப்பு பண்றோம், னு தான் எழுதுவாங்க... நீங்களும் அப்டி தான் எழுதுவீங்க னு நெனச்சேன்... ஆனா எங்க ஆழ் மன வேதனையை வெளி கொண்டு வந்துருக்கீங்க ரொம்ப நன்றி னு சொன்னாங்க...
ரொம்ப சந்தோச பட்ட சில தருணங்களில் அதும் முக்கியமானது...
Happy transgenders day...
Saturday, April 14, 2018
இனியொரு பிறவி வேண்டாமடி எந்த ரூபத்திலும் உனக்கு... அன்பு தங்கை Asifa
மாதவிடாய் நாட்களில் புறம் தள்ளப்படும் பெண்கள், கற்பழிக்கப்படுகிறார்கள் கோவில் கருவறையில்...
பாதுகாப்போடு...
8 நாட்களாம்....
கண் முன் நடந்த இந்த செயலை, அவள் தொழுத கடவுளும் காக்கவில்லை, அந்த கோவிலுக்குள் இருந்த கடவுளும் தடுக்கவில்லையெனில், கடவுள் நம்பிக்கை தேவை தானா என எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்...
அவன் அவன் வீட்ல நடக்காத வரை இவை வெறும் செய்தியே...